Astrology Software  Available Contact Us: 99767 32039

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம் (மீண்டும் பிறப்பு ;மீண்டும் இறப்பு ;மீண்டும் தாயின் கருப்பையிலேயே படுக்கை .)

நர்மதா நதி குளுமையான சோலைகளின் நடுவே சலசப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது .பரத்வாஜ முனிவர் நீராட வருகிறார் .அங்கு நீராடிக்கொண்டிருந்த அப்சரஸ் என்ற தேவலோக மங்கையை நோக்கினார் .ரிஷிப்பிண்டம் ராத்தங்காது என்பதற்கேற்ப அகோர வீரபத்ரர் ,அங்காரகனை தந்தையான பரத்வாஜரோ தாய் அப்சரஸோ கண்டுகொள்ளாமல் ஆற்றின் கரையிலேயே விட்டு விட்டு சென்று விட்டனர் .அங்காரகனை பூமாதேவி எடுத்து வளர்த்து ஆளாக்கி தக்க கல்வி கற்க தந்தையான பர்த்வாஜரிடமே ஒப்படைக்கிறார் .தான் தந்தையைக் குருவாக ஏற்று 64 கலைகளும் கற்றுத் தேர்ந்து கடுமையான தவங்களை மேற்கொண்டு அன்னை பராசக்தியின் பாதாரவிந்தங்களை அடைகிறார் .

அன்னை பராசக்தி தேவி சிவனை நோக்கி கடும் தவம்
இயற்றும் போது ,தவ உக்கிரத்தின் வெளிப்பாடாக மண்ணில் விழுந்த அன்னையின் வியர்வை த் துளியிலிருந்து மீண்டும் அங்காரகன் பிறப்பெடுக்கிறார்.பராசக்தி தேவியால் வளர்க்கப்பட்டு தக்க வயதில் பரத்வாஜ முனிவரிடம் கல்வி கற்க அனுப்பப்படுகிறார் .64 கலைகளையும் கற்றுத் தேர்ந்து ,அவந்தி தேசத்திற்கு மன்னனாகி சக்தி தேவியை மணந்து கொள்கிறார் .

தனது தவ வலிமையால் விநாயகப்பெருமானின் அருள்
பெற்று ,வானத்தில் செஞ்சுடர் ஒளியுடன் கூடிய செவ்வாய் கிரமாகி நவக்கிரக பரிபாலனம் செய்து வருகிறார் .

செவ்வாய் தோஷம் என்பது மனதாலும் ,உடலாலும் ,தனக்கும், பிறருக்கும் செய்யும் பாவ செயலளின் அழுத்தமான பின்விளைவுகளேயாகும் .நம் வாழ்வில் பல சந்தர்ப்ப சூழ்நிலையில் நாம் செய்யும் செயல்கள் மற்றவர்களின் நலன்களைப் 
பாதிக்கின்றன .அதன் பின் விளைவுகள் தோஷமாகின்றது.சுயநலமின்றி சமுதாய நலனுக்காக நாம் செய்யும் சில செயல்கள் கூட தோஷங்களை ஏற்படுத்தலாம் .ஆனால் அவை விரைவில் அதன் கடுமையைக் குறைத்துக் கொள்ளும் .தோஷங்கள் கட்டுப்பாடிற்குள் இருக்கும் .மிகப்பெரிய சுமூக மாற்றங்கள் ஏற்படக் காரணமானவர்களின் வாழ்வு மற்றும் மரணத்தில் கூட சில புரிந்து கொள்ள முடியாத மர்மங்களும் பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன .தாய்க்கும் தந்தைக்கும் செவ்வாய் தோஷம் இருக்கின்ற நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் கூட செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் எண்ணிக்கை சமுதாயத்தில் அதிகரிக்கும் .ஒரு தோஷமுள்ள குடும்பத்திற்கு இன்னொரு தோஷம் உள்ள குடும்பமே சம்பந்திகளாவர்.

நம்மில் பலர் செவ்வாய் தோஷம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஏதோ மாபெரும் தவறு நடந்து விட்டதைப் போல் மனக்கலக்கமும் பயமும் அடைகின்றனர் . ஆனால் இது தேவையற்ற பயமோ ஆகும் .

தோஷம் என்ற சொல்லுக்குச் சரியான பொருள் குறைவுபடுவதில் அல்லது பலவீனப்படுதல் என்று கொள்ளலாம் .ஒரு வீட்டில் பாபக்கிரகங்கள் அமர்ந்தால் அல்லது அந்த 
வீடு பாதிப்படைந்தால் ,அந்த வீட்டின் ஆதிபத்திய கூறுகள் சிதைவடைந்து தகுந்த கால -நேரத்தில் பலன்களை அனுபவிக்க முடியாமல் போவதைத் தான் தோஷம் என்கிறோம் .

செவ்வாய் தோஷம் என்பது ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்தும் , சந்திரனிலிருந்து , சுக்கிரனிலிருந்தும் 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் நின்றால் உண்டாகி விடுகிறது .இந்த அடிப்படையில் பார்த்தோமானால் உலகில் பிறக்கும் மக்களின் பாதிக்கும் மேல் செவ்வாய் தோஷம் உண்டு .கணவன் ஜாதகத்தில் செவ்வாய் தோஷமிருந்தால் மனைவி இறந்து விடுவார் என்றும் மனைவி ஜாதகத்தில் செவ்வாய் தோஷமிருந்தால் கணவன் இறந்து விடுவார் என்பதும் பொதுப்படையான கருத்து .இந்த அடிப்படையில் பார்த்தால் உலகில் சரிபாதி மக்கள் திருமணம் ஆனவுடன் இறந்து விட
வேண்டும் .இது இயற்கையின் நியதிகளுக்கும் முற்றிலும் 
மாற்பட்டதாகும் .ஆனால் நடைமுறையில் அப்படியில்லையே , ஏன்? இவற்றிற்கு மாற்றங்களும் , விதிவிலக்குகளும் உண்டு . தோஷம் சந்தோஷத்தை கெடுக்குமா ? கொடுக்குமா ? என எண்ணத்
தோன்றும் .எந்த பொருளிலும் ( ஜடப்பொருட்கள் உட்பட ) மாற்பட்ட மிதுகள்கலான புரோட்டான் (+) எலக்ட்ரான் (-) எப்போதும் சுற்றிகொண்டே செயல்படுவதால் தான் அது அப்பொருளாக காணப்படுகின்றது . மின்சாரத்திற்கும் நேர்முனை (+),
எதிர்முனை (-) ,அணுக்கள் உள்ளன .பிறப்பு -இறப்பு ,பகல் -இரவு ,
ஆண் -பெண் ,மேடு-பள்ளம் ,வரவு -செலவு ,உறவு-பகை என எல்லாவற்றிலும் இரு வேறுபட்ட அமைப்புகள் காணப்படுவதைப் போல் தோஷத்திலும் நன்மை-தீமை என்ற அமைப்புகள் உள்ளன .

திருமணத்தை பொறுத்தவரை அதிக முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது .

லக்கினமே ஒருவருக்கு அனைத்துமாக இருப்பதால் இந்த தோஷத்திற்கு முக்கியமான லக்னம் இருக்கபடுகிறது .லக்னம் எல்லா பாவங்களையும் கட்டுபடுத்தும் திறன் கொண்டது .

மனதிற்கும் ,உணர்ச்சிகளுக்கும் சந்திரன் 
காரகமாவதால் ,சந்திரனிலிருந்தும் செவ்வாய் தோஷம் காணப்படுகிறது

திருமணம்,வாழ்க்கைத் துணை மற்றும் பாலியல் மகிழ்ச்சிக்கும் சந்திரன் காரகமாவதால் செவ்வாய் தோஷத்திற்கு சுக்கிரனும் முக்கியமாகக் கருதப்படுகிறது .

முதலாவது வீடு (லக்னம்) பொதுவாக தன்னைப்பற்றியது ,ஆனதால் இந்த இடத்தில் செவ்வாய் இருப்பது உடலளவில் கஷ்டங்களையும் , பாதிப்புகளையும் காரணமாகிறது .

இரண்டாம் வீடு தனம் மற்றும் குடும்பத்தைக் குறிகாட்டுவதால் இங்கு செவ்வாய் குடும்ப விஷயங்களிலும் , பொருளாதார 
விஷயங்களிலும் ,கஷ்டங்களைக் கொடுக்க ஏதுவாகிறது .

நான்காம் வீடு - குடும்ப சந்தோஷம் மற்றும் வாழ்க்கை வசதிகளை குறிகாட்டுவதால் செவ்வாயால் இங்கு ஏற்படும் பாத்திப்பு ஜாதகருக்கு மிகுந்த பிரச்சனைகளை தரவல்லது .

7 ம் வீடு ஒருவரின் வாழ்க்கைத் துணை ,திருமணம் ,
மணவாழ்வு ,ஆகியவற்றிக்கு முக்கிய இடம் ஆதலால் செவ்வாயால் இந்த வீட்டிற்கு ஏற்படும் பாதிப்பு இந்த காரணங்களில் இன்னல்கள் ஏற்படுத்தக் காரணமாகிறது .

8 ம் வீடு ஆயுளையும் ,மங்கல்யத்தையும் ,குறிகாட்டுவதால் இந்த வீட்டில் செவ்வாய் இடம் பெறும்போது இக்காரணங்களுக்குண்டான பாதிப்பு கஷ்டங்களைக் தருகிறது .

12 ம் வீடு பாலியல் மகிழ்ச்சி மற்றும் படுக்கை சுகம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதால் இந்த வீட்டிற்கு செவ்வாயால் ஏற்படும் பாதிப்பு இந்த காரணங்களால் ஜாதகருக்குக் கஷ்டங்கள் ஏற்படக்காரணமாகிறது.

லக்கனத்தில் செவ்வாய் இருக்க ஏற்படும் செவ்வாய் தோஷம் அதிகமான பாதிப்புகளைத் தராது என நம்பப்படுகிறது .இந்த பாதிப்பானது சந்திரனிலிருந்து பார்க்கப்படும் போது பலம் 
மிக்கதாகுவும் ,சுக்கிரனிலிருந்து பார்க்கப்படும் போது பலம் மிக்கதாகுவும் கருதப்படுகிறது .1,2,4,12 வது வீடுகளில் செவ்வாய் இருக்கும் போது ஏற்படும் தோஷம் குறைவான தோஷம் 
ஆகும் .ஆகவே 7,8 வது வீடுகளில் இருக்கும் போது ,மிகப்பெரிய அளவிலான தோஷத்தை அளிக்கிறது.செவ்வாய் தோஷம் என்பது நாம் அசட்டையாக ஒதுக்கிவிடகூடியது ஒன்றில்ல .அது சர்வ நிச்சயமாக ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு காரணமாகின்றது .

லக்கனத்தில் செவ்வாய் நின்றால் ,திருடர் பயம் , உடலில் காயங்கள் ஏற்படுதல் ,பெற்றோரிடம் பாசமின்மை ,கண் நோய்,தலையில் நோய்,நெருப்பில் கண்டம் ,சக்திமிகு உடலில் வியாதி ,விரைவில் நிவாரணம் ,சிக்கலை எதிர்கொள்ளுதல் ,சவால்களில் வெற்றி 
பெறுதல் ,மூட சிந்தனை ,சிறிய விஷயத்தை பெரிதாக எடுத்துகொள்ளுதல்,சுய நலம் ,தற்புகழ்ச்சி .

2 ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் - தாராளமனம் ,ஊதாரி ,அதிக செலவு செய்தல் ,கபடமற்ற வெளிப்படையான மனம் ,பூர்விக சொத்துக்கள் சட்ட ரீதியாக கிட்டுதல்

4 ம் இடத்தில் செவ்வாய் நின்றால் மார்பு வலி ,இதய நோய் ,வாகன விபத்து ,கல்வியில் மந்தம் ,தாயார் ,உறவினர் 
சந்தோஷமின்மை ,அரசியல் வெற்றி ,தாயாருடன் தகராறு ,சொந்த வீடு ஆனாலும் மகிழ்ச்சியின்மை .

7 ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் குறுக்கு 
புத்தியுள்ளவர் .திருமண வாழ்வில் சண்டை சச்சரவு ,கோபம் ,சூதாட்ட 
ஆர்வம் ,புத்திகூர்மை ,தைரியம் ,வாழ்க்கையில் போராட்டம் அதிகமாகும் .

8 ல் செவ்வாய் இருந்தால் - ஆயுள் குறைபாடு ,குறைவான எண்ணிக்கையில் வாரிசுகள் ,உறவினர்களிடம் வெறுப்பு ,இல்லற வாழ்வில் சண்டை சச்சரவு ,மூல நோய்,கூட்டத்திற்கு 
தலைமை ,வழக்குகளில் வெற்றி ,உயில் மூலம் சொத்து கிடைக்கும் .

12 ல் செவ்வாய் இருந்தால் - மனைவி இழப்பு ,சுய நலம் ,உஷ்ண 
நோய் ,வெறுப்புணர்ச்சி ,பணக்கஷ்டம் ,கொடூர குணம் ,வீண் 
விரையம் ,அறுவை சிகிச்சை ,இளமையில் திருமணம்,விவாகரத்து முதலியன .

'இவ்வாறெல்லாம் செவ்வாய் தோஷம் உள்ளதே - நம் ஜாதகத்தில் ' என பயந்து ,மன வேதனைப்பட்டு முடங்கிவிட வேண்டாம் .இந்த விதிகளுக்கும் ,தோஷங்களுக்கும் நிறையவே விதி விளக்குகளுக்கும் உள்ளன .

செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் .

1. மேஷம் ,கடகம் ,சிம்மம்,விருச்சுகம் ,தனுசு ,மகரம்,மீனம் இந்த ஏழு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் இவற்றில் எங்கு இருந்தாலும் ,செவ்வாய் தோஷம் இல்லை மற்றும் இந்த ஏழு இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

2. மேஷம் ,விருச்சுகம் ,இரண்டாம் இடமாகி அங்கு செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.

3. ரிஷபம் ,துலாம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 4 ல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை .

4. கன்னி,மகரம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 8 ல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை .

5. மிதுனம் ,கன்னி லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 12 ல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை .

6. செவ்வாயைச் சனி பார்த்தாலும் ,குரு பார்த்தாலும் தோஷம் 
இல்லை .

7. பெண்கள் ஜாதகத்தில் 7 ம் இடத்திலோ , 8 ம் இடத்திலோ 
செவ்வாய் ,மற்றும் சூரியன் ,சனி இவர்களில் ஒன்றோ ,
பலவோ ,நின்றால் கூட 9 ம் இடத்தில் ஒரு சுபகிரகம் நின்றால் அந்த ஜாதகிக்கு கணவரது ஆதரவும் ,புத்திர பாத்திர யோகமும் ,சுக ஜீவனமும் ,சந்தோஷ் வாழ்வும் உண்டு என்றும் ,2 ம் இடத்தில் சுபகிரகம் இருக்குமானால் விதவா தோஷம் இல்லை என்றும் திட்டவட்டமாகச் சொல்லப்படுகிறது .

8. பலித மார்த்தாண்டம் என்ற நூலில் சர ராசிகளில் பிறந்தவர்களுக்கு அந்த ஜாதகத்தில் செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை என்று சொல்லப்படுகிறது.மேலும் புதன் வீட்டில் செவ்வாய் தோஷம் இல்லையென்று உள்ளது .

இவ்வாறெல்லாம் பார்த்தால் ,5 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களுக்கே செவ்வாய் தோஷம்

Namakkal